அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

Old pension scheme latest news in Tamil | பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும்

Old pension scheme latest news in Tamil | பழைய ஓய்வூதிய திட்டம் முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும்

Old pension scheme latest news in Tamil

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, முதல்வர் தன் நெடிய மவுனம் கலைக்க வேண்டும் என, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் வெளியிட்ட அறிக்கை: நிதி அமைச்சர் தியாகராஜன், ஓய்வூதியம் தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்தவொரு வழிமுறையையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

Read Also: ஜாக்டோ ஜியோவினர் அலறவிட்ட அதிமுக எம்எல்ஏ

அவர் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் வாழ்வாதார உரிமையான அகவிலைப்படி, சரண் விடுப்பு ஆகியவற்றை பரித்ததோடு, அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் சமூகத்தை எள்ளி நகையாடுகிறார். ஜாக்டோ – ஜியோ கடந்த, 11ம் தேதி கோட்டை முற்றுகை அறிவித்த நிலையில், அமைச்சர் குழு பேச்சு நடத்தியது. அதை தொடர்ந்து, சட்டசபை கூட்டத்தொடரில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், முதல்வர், ஒற்றை வார்த்தையை கூட சொல்லாமல், ெதாடர்ந்து மவுனம் காத்து வருவது, தமிழக அரசின் மீதான கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை முற்றாக தகா்த்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும், தன் நெடிய மவுனத்தை கலைத்து, முதல்வர் உடனே அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Related Articles

Latest Posts