அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் அருங்காட்சியக பார்வையரங்கம் – Sri Krishna Adithya College Coimbatore

ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி-  தமிழ்த்துறையின் “சிரிப்போம் சிந்திப்போம் மன்றம்” சார்பில்  “புதையல்” எனும் பொருண்மையிலான சிறப்பு அருங்காட்சியகப் பார்வையரங்கம்  நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நம் கல்லூரி முதல்வர் முனைவர் செ.பழனியம்மாள் அவர்கள் தலைமை தாங்கித் தலைமையுரையாற்றினார்.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.செல்வநாயகி அவர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார்.

“புதையல்” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, பிரபல தொல்லியல் ஆய்வாளரும், கோவை அரசு அருங்காட்சியகத்தின் காப்பாளருமான கோ.அ.முருகவேல்   அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தமிழகத் தொல்லியலில் கொங்குநாட்டின் பெரும்பங்கு எத்தகையது என்பது பற்றியும், கொங்குநாட்டின் பண்டைய கால வாணிபம், பெருவழிகள், நாணயங்கள், கல்வெட்டுகள், சித்திரங்கள்,கைவினைப் பொருட்கள்,சுடுமண் சிதைகள், கோவில்கள், சிற்பங்கள், மற்றும் கொங்குநாட்டு மக்கள் வாழ்க்கை முறை ஆகியன பற்றி மிகவும் தெளிவாக ஆவணங்களுடன் விளக்கிக் கூறினார்.

பேரா. கா.விக்னேஷ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மிகுந்த பயனுள்ள வகையில் இந்த நிகழ்வு அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Posts