அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.6 C
Tamil Nadu
Wednesday, June 25, 2025

பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறிய வீடு வீடாக கணக்கெடுப்பு: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

கொரோனா காரணமாக பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களை கண்டறியவும், அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

  • பள்ளியில் இருந்து பாதியில் நின்ற மாணவர்களை அடையாளம் காண வீடு தோறும் சென்று கணக்கெடுக்க வேண்டும்.
  • புலம் பெயர்ந்துள்ள குடும்பத்தாரின் குழந்தைகள் தற்போது பள்ளிக் கல்வியை நிறுத்துவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, அவர்களைக் கண்டறிவதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
  • பள்ளிகள் மீண்டும் திறப்பது தொடர்பான தகவல்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது அவசியம்.
  • மாணவர் சேர்க்கையின்போது காலதாமதம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தவும், இந்த ஆண்டு கல்வியை நிறுத்திய மாணவர்களை சேர்த்துக் கொள்ளவும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது.
  • கல்வித்தரம் பாதிக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள், சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்றவை மாணவர்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.
  • சிறு கிராமப்புறங்களில் நடமாடும் வகுப்புகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கலாம்.
  • பள்ளி பாடங்கள் கற்பித்தலுக்கு அப்பாற்பட்டு, படைப்பாற்றலையும், பிரச்னைகளைத் தீர்க்கும் திறனையும், எண்கள் தொடர்பான அறிவையும் மாணவர்களிடம் உருவாக்குவது இன்றைய தேவை.

Related Articles

Latest Posts