பட்டதாரி ஆசிரியர் மீது பொய்யான பாலியல் குற்றச்சாட்டு கூறிய விவகாரத்தில் ஆசிரியைகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுபவர் சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2016ல் பணியாற்றியபோது, சத்துணவு அமைப்பாளர் ஒருவருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாக குற்றம் சுமத்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Read Also This | ரூ 1.25 கோடி விவகாரம் கல்வி அலுவலக பணியாளருக்கு கட்டாய ஓய்வு
இதனை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் வழக்கு தாக்கல் செய்தார். விசாரணையில் ஆசிரியர் சுரேஷ் மீது தவறு நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து சுரேஷை சஸ்பெண்ட் செய்ய போலியாக ஆவணங்கள் தயாரித்து, பாலியல் புகார் தெரிவித்த பட்டதாரி ஆசிரியைகள் செல்வி, மோகனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் மீது பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கான சட்டப்பிரிவு 14ன் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுரேஷ் வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாாித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் சட்டத்தை தவறாக பயன்படுத்திய ஆசிரியை இருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.


