School education department warned teachers and headmasters | ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எச்சரிக்கை
School education department warned teachers and headmasters
விடைத்தாள் மறுமதிப்பீட்டில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 11-ம் வகுப்பு மாணவர்களை போன்று பத்தாம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் பெற முடியும் என பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாளில் அதிக குறைபாடுகள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு இருந்தால் அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. மறுமதிப்பீடு செய்து அறிவிக்கும் மதிப்பெண்களை இறுதியானது என்றும் மறு மதிப்பீட்டில் மதிப்பெண்கள் குறைந்தால் பழைய மதிப்பெண்கள் மீண்டும் வழங்க இயலாது எனவும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.