அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.9 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

ஞாயிறன்று தேர்தல் பயிற்சி வகுப்பை ‘கட்’ செய்யுங்க, ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  தொடர்ந்து ஆறு நாட்கள் பணி செய்வதால் ஞாயிறன்று தேர்தல் பயிற்சி வகுப்பை நடத்துவதை கைவிட வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சா.அருணன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

முதற்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்று கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால், திங்கள் கிழமை முதல் சனி வரை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தொடர் பணியில் இருப்பதால் ஞாயிறும் பயிற்சி வகுப்பு என்றால் விடுமுறையே இல்லாமல் எவ்வாறு அவர்களால் தொடர்ந்து பணி செய்யமுடியும் என்பதை தேர்தல் ஆணையம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிலும் பெரும்பாலானோர் பெண்கள் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையம் உணரவேண்டும். ஞாயிறு பயிற்சி வகுப்பை கைவிட்டு வேலை நாட்களில் பயிற்சி வகுப்பை நடத்த வேண்டும் அல்லது ஞாயிறு பயிற்சி வகுப்பு இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை தமிழக தலைமை தேர்தல் ஆணையரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு  வலியுறுத்தி கேட்டுகொள்கிறது.

இவ்வாறு, அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Posts