அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31 C
Tamil Nadu
Tuesday, February 10, 2026

தனியார் கல்லூரியில் கொரோனா பாதிப்பு – மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

கடந்த சில நாட்களாக, கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தியை வெளியிட்டு வரும் நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் பெண்கள் பள்ளியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பள்ளிக்கு இரண்டு வார விடுமுறை அளிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. மருத்துவக்குழுவினர் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கல்லூரிக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படிக்கும் காட்டூர் அரியமங்கலத்தை சேர்ந்த 2ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும், வரலாறு பிரிவில் படிக்கும் 3 மாணவர்களுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி என கொரோனா அறிகுறிகள் இருந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரிக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த மாணவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாநகரில் சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.  

Related Articles

Latest Posts